Subscribe Us

header ads

பதிவு ரத்து செய்யப்பட்ட பேருந்து: வெளியான அதிர்ச்சி தகவல்!

 


எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து, 2023ஆம் ஆண்டிலேயே தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு ரத்து செய்யப்பட்டிருந்தது என போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.


சுற்றுலாப் பேருந்துகளுக்கு சட்டம் இல்லை: சுற்றுலாப் பயணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கு இதுவரை எந்த சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார். விபத்துகளைக் குறைப்பதற்காக அந்த வீதியில் சாலை அபிவிருத்தி அதிகார சபை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இதற்கிடையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினர், விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்வதற்காக எல்ல பகுதிக்குச் சென்றுள்ளனர்.


இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments