Subscribe Us

header ads

விஜய் கச்சத்தீவை பெற்றுக் கொள்ளவிட்டால், அவருக்கு உறக்கம் வராதா..?

 


விஜய் தேர்தலில் வெற்றிப் பெற்று கச்சதீவை மீள எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.


சீலரத்தன தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று (02.09.2025) இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று விஜய்யின் கச்சதீவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்தி மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.


இதன்பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்துரைக்கும் போதே தேரர் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,


“விஜய் ஒரு நடிகர். அவருக்கு எதிராக இலங்கையில் எதிர்க்கட்சி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இலங்கை - இந்திய நட்புறவுக்கு தீங்கு ஏற்படும் இந்தக் கருத்துக்கு அரசியல்வாதிகள் எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. விஜய், கச்சத்தீவை பெற்றுக் கொள்ளவிட்டால் அவருக்கு உறக்கம் வராது என்கிறார். இந்நிலையில், நாம் இந்திய பிரதமருக்கு கச்சதீவை வழங்க வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments